தமிழ்நாடு

Saneeswaran Temple| சனீஸ்வரன் கோயிலுக்கு படையெடுக்கும் மக்கள் - நேரம் ஆக ஆக அதிகரிக்கும் கூட்டம்

Saneeswaran Temple| சனீஸ்வரன் கோயிலுக்கு படையெடுக்கும் மக்கள் - நேரம் ஆக ஆக அதிகரிக்கும் கூட்டம்

thanthitv

ஆடி மாதம் 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு, காரைக்கால் அடுத்த திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். தமிழகத்தின் திருச்சி, தஞ்சாவூர், சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர். முன்னதாக நளதீர்த்த குளத்தில் புனித நீராடி, கலிதீர்த்த விநாயகரை வழிபட்ட பக்தர்கள், நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், காவல் கண்காணிப்பாளர் பழனிவேல், ஆய்வாளர் பிரவீன் குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

DMK vs TVK| ``தமிழக மக்கள் பார்த்துட்டு தான் இருக்காங்க’’ - திமுக முடிவுக்கு எதிர்பாரா எதிர்வினை

Tiruvannamalai | அமித்ஷா வரும் முன்னே பெரும் பரபரப்பு - கருவறை செல்லும் முன்னே பிடிப்பட்ட இளைஞர்கள்

TN Temple News| கோயில்களில் செப். 1 முதல் `முழுதாக தடை’ - குறிப்பாக VIP நபர்களுக்கு ஷாக்

Report `நீட்’ விவகாரத்தில் பேரதிர்ச்சி திருப்பம் - ``NTA உள்ளே இருந்தே லீக்..’’ CBI ஷாக் ரிப்போர்ட்

Kamal| CM Vijay Meeting| CM விஜய் கூட்டம்.. இரு தரப்பையும் குழம்ப விட்ட கமலின் முடிவு