தேர்தல் காரணமாக இணையதள சேவை மூலம் வழங்கப்பட்டு வந்த மணல் விற்பனையை தடைசெய்துள்ளதை நீக்க கோரி சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பினர் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அந்த சங்கத்தினர், தேர்தலை காரணம் காட்டி மணம் விற்பனையை நிறுத்தும் அரசு, டாஸ்மாக் விற்பனையை நிறுத்துமா என்ற கேள்வி எழுப்பினர்.