தமிழ்நாடு

மணல் கடத்தல் வழக்கு - குண்டர் சட்ட நடவடிக்கை சுற்றறிக்கையை வெளியிட தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு

மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பான சுற்றறிக்கையை 2 வாரத்திற்குள் வெளியிட தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

தந்தி டிவி

* மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பான சுற்றறிக்கையை 2 வாரத்திற்குள் வெளியிட தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

* மணல் கடத்தல் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், எஸ்.எம்.சுப்ரமணியம், ராமதிலகம் அடங்கிய அமர்வு, அக்டோபர் 3ஆம் தேதிக்குள் சுற்றறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தது.

* அப்போது, மாநில குற்றவியல் அரசு வழக்கறிஞர், இது சம்பந்தமாக வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

* ஏற்கனவே சட்டத்தில் உள்ள விதியை அமல்படுத்த இவ்வளவு நீண்ட நடை முறை தேவையா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவர்களை தண்டிக்காமல் இருக்க முடியாது எனக் கூறினர்.

* மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுற்றறிக்கையில் குறிப்பிட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு