தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்றது. வெயிலின் தாக்கத்தை பயன்படுத்தி உப்பளங்களில் உப்பு சேகரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். பருவமழை தொடங்கியதும் உற்பத்தி பாதிக்கப்படும் என்பதால், தற்போது உப்பு உற்பத்தி தீவிரமடைந்தது.