தமிழ்நாடு

ஊரகப்பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதி...

ஊரகப்பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகள் திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

ஊரகப்பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகள் திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகர காவல் எல்லை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அனுமதியில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கியுள்ளதாகவும், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். "முடி திருத்தும் நிலையங்களில் தினம்தோறும் 5 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்" என்றும்..."கையுறை அணிந்து முடிதிருத்த வேண்டும் என்றும், முகக் கவசம் அணிவது கட்டாயம் என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அடிக்கடி சோப்பு கொண்டு கைகழுவுவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்