தமிழ்நாடு

குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல் : காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே ஏகாபுரம் கிராமத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே ஏகாபுரம் கிராமத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் போடப்பட்ட மின் மோட்டார்களை சிலர் திருடி சென்று விட்டதாகவும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அறித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியலால் இளம்பிள்ளை பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்