சேலத்தில் இரவு பணிமுடித்து வீடு திரும்பிய நபரை வழிமறித்து இரண்டு இளைஞர்கள் சரமாரியாக தாக்கி,செல்போன் மற்றும் பணத்தை பறித்து கொண்டு தப்பியோடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் செங்கல் அணை சாலையில் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் சரவணன் கடந்த 22 ஆம் தேதி இரவு பணி முடித்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம இளைஞர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் முகத்தில் கத்தியால் குத்தி விட்டு கீழே தள்ளி சரமாரியாக தாக்கிவிட்டு அவரிடமிருந்த 16 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.