சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியில் ஐம்பொன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. கெங்கவல்லி பகுதியில் ஐம்பொன் சிலை பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் பிரிவு டிஎஸ்பி ராஜாராம் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு ராஜசேகர் என்பவரின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது அவர் ஒன்றரை அடி உயரம் கொண்ட ஆறரை கிலோ எடையிலான பஞ்சேலாக அம்மன் சிலை ஒன்றை கடத்தி பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்த அந்த ஐம்பொன் சிலை 5 கோடி ரூபாய் மதிப்பிலானது என்றும், அந்த சிலையை விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சிலையை பறிமுதல் செய்த போலீசார், சிலை கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜாராமை கைது செய்தனர்..மேலும் இந்த சிலை கடத்தல் சம்பவத்தில் வேறு யார் யார் தொடர்பில் உள்ளார்கள் என்பது குறித்து சிலை கடத்தல் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.