சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகளுக்கு 17 வயதாகும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவியை ராஜா பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதில் அவர் 4 மாதம் கருவுற்றார். இதையடுத்து மாணவிக்கு 17 வயது என்பதால் திருமண முயற்சிகளும் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் ராஜாவின் தாய் லட்சுமி, தாய் மாமன் ராமர் உள்ளிட்ட 5 பேர் மாணவிக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் 5 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய காதலன் ராஜா உள்ளிட்டோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.