தமிழ்நாடு

தேரோட்டத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் : தடியடி நடத்திய போலீசார் - 20 பேர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோயில் திருவிழாவில் இருதரப்பினர் மோதிக்கொண்டதால், பக்தர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் பெரும் பாதிப்படைந்தனர்.

தந்தி டிவி

தாரமங்கலத்தில் உள்ள சிவன் கோயிலில், தைப்பூச திருவிழா களைகட்டியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த நிலையில், இளைஞர்கள் இடையே ஏற்பட்ட வாய் தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. பின்னர், இருதரப்பினர் மோதலாக மாறி கலவரமானது. கல், கட்டைகளால் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில், கடைகள், வாகனங்கள் சேதமாகின. பக்தர்கள் பொதுமக்கள் காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். ரவி என்பவர் உள்ளிட்ட 20 பேரை கைது செய்து விசாரிக்கும் போலீசார், மேலும் பலரை தேடி வருகின்றனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்