தமிழ்நாடு

ஏரியில் உற்சாக குளியல் போட சென்ற மாணவர்கள் - ஆழம் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சேலத்தில் தேர்வு முடிந்து, ஏரியில் உற்சாக குளியல் போட வந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர், நீரில்மூழ்கி உயிரிழந்தனர்.

தந்தி டிவி

சேலத்தில் தேர்வு முடிந்து, ஏரியில் உற்சாக குளியல் போட வந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர், நீரில்மூழ்கி உயிரிழந்தனர். ராசிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரி மாவணர்கள் 6 பேர், சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியில் உள்ள வலசகல்பட்டி ஏரியில் குளிப்பதற்காக வந்துள்ளனர். அப்போது, ஆழம் அதிகமான பகுதிக்கு சென்ற விக்னேஷ், சிவசங்கர், கோகுல் ஆகிய 3 மாணவர்கள், நீரில் மூழ்கி த‌த்தளித்துள்ளனர். இதை கண்ட மற்ற மாணவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள், மாணவர்களை காப்பாற்ற முயன்றனர். விக்னேஷ் என்ற மாணவரை மட்டும் காப்பாற்றிய நிலையில், சிவசங்கர், கோகுல் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்