தமிழ்நாடு

காளையர்களை மிரட்சி அடைய வைக்க தயாராகும் காங்கேயம் காளை 'மருது'

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காளைகள் தயாராகி வரும் நிலையில், சேலம் அருகே மிரட்டும் தோரணையில், காங்கேயம் காளை ஒன்று தயாராகி வருகிறது. அது குறித்த செய்தித்தொகுப்பு....

தந்தி டிவி

சீவி விட்ட கொம்புகள், அடங்காத தாடை, அடக்கமுடியாத திமில், பார்ப்பவர்களை மிரள வைக்கும் கண்கள் என, தோரணையோடு, காளையர்களை மிரட்சி அடைய வைக்கும் வகையில் தயாராகி வருகிறது மருது என்ற பெயர் கொண்ட இந்த காங்கேயம் காளை.

சேலத்தை அடுத்த கன்னங்குறிச்சியை சேர்ந்த விவசாயி கார்த்தி என்பவர் வளர்த்து வரும் காங்கேயம் காளைக்கு, 5 வயது ஆகும் நிலையில், ஜல்லிக்கட்டில் களமிறக்க தயார் படுத்தி வருகிறார். சத்தான உணவுகள், நடைபயிற்சி,நீச்சல் பயிற்சி மற்றும் கொம்புக்கு பயிற்சி என பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார்.

ஏற்கனவே நடைபெற்ற போட்டியில் பங்கேற்று தமது காளை பரிசு வென்றதாக கூறும் உரிமையாளர், இந்தாண்டு ஜல்லிக்கட்டிலும் பரிசு வெல்லும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

பல்வேறு பயிற்சிகளுடன் காளைகளும், காளையர்களும் தயாராகி வரும் நிலையில், இந்தாண்டும், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு களைகட்டும் என்பதில் ஐயமில்லை.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு