குழந்தையின் சிறுநீர்ப்பாதையில் அடைப்பு : அறுவை சிகிச்சை இன்றி அடைப்பு நீக்கம்
இதே மருத்துவமனையில், சிறு குழந்தையின் சிறுநீர்ப்பாதையில் இருந்த அடைப்பை அறுவை சிகிச்சை இன்றி, மருத்துவர்கள் சரி செய்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த வினோதினிக்கு, பிறந்த ஆண் குழந்தை மூச்சுத் திணறல் உடன் வயிறு வீங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு எந்த ஒரு திறந்த அறுவை சிகிச்சையும் செய்யாமலேயே இரண்டு மில்லி மீட்டர் அளவான சிறு உள்நோக்கியை சிறுநீர் பாதையில், செலுத்தி சிறுநீர் பாதையில் ஏற்பட்டிருந்த அடைப்பினை நீக்கி, அரசு மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து இரு பச்சிளம் குழந்தைகளுக்கு சவாலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்த மருத்துவர்களை அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் பாராட்டினார்.