தமிழ்நாடு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மாணவனை பிரம்பால் அடித்ததாக ஆசிரியர் மீது புகார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு பள்ளி மாணவன் பிரம்பால் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு பள்ளி மாணவன் பிரம்பால் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னப்பம்பட்டியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் யோகேஸ்வரன் செங்கோடனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 4- ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் பலகையில் மாணவன் சரியாக எழுதவில்லை என கூறி ஆங்கில ஆசிரியர் வெங்கடேஷ் மாணவனை பிரம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்