தமிழ்நாடு

சேலம் அரசு மருத்துவமனையில் மருந்து வாங்கியதில் மோசடி: விரைவில் விசாரணை தொடங்கும் - லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தகவல்

சேலம் அரசு மருத்துவமனையில் மருந்து மற்றும் உபகரணங்கள் வாங்கியதில் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் மருத்துவமனை முதல்வர் உள்பட 5 பேர் மீது, வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டில் சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவமனை முதல்வராக கார்த்திகேயன் என்பவர் பணியாற்றினார்.

இவர் பணியாற்றிய காலகட்டத்தில், மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்து மாத்திரைகள் வாங்கியதில், இரு மடங்கு முதல் மூன்று மடங்கு வரை அதிக விலை கொடுத்தும், போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும் யாரும் புகார் தராததால், கார்த்திகேயன் மற்றும் மற்ற அதிகாரிகள் மீது விசாரணை ஏதும் நடக்காத நிலையில், ஓய்வு பெற்றனர். இந்த நிலையில் இந்த ஊழல் தொடர்பாகசேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு புகார் வந்துள்ளது. விசாரணையில், முதல்வர் கார்த்திகேயன் சிலருடன் சேர்ந்து 12 லட்சத்து 48 ஆயிரம் வரை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய லஞ்ச ஒழிப்புத்துறை, விரைவில் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி