தமிழ்நாடு

பொய் வழக்கு பதிவுக்கு ஒத்துழைக்காத பெயிண்டர் : போலீசார் மிரட்டலை கண்டித்து தீக்குளிப்பு

பொய் வழக்கு போட ஒத்துழைக்காததால், மனைவியை தவறாக பேசிய போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன்பு ஒருவர் தீக்குளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

பொய் வழக்கு போட ஒத்துழைக்காததால், மனைவியை தவறாக பேசிய போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன்பு ஒருவர் தீக்குளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பெயிண்டர் சிலம்பரசன், அங்குள்ள காவல் நிலையம் முன், மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்துள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். பொதுப் பிரச்சினைகளில் தலையிடும் அவர், அண்மையில் சிறையில் இருந்து திரும்பியுள்ளார். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சிலம்பரசனை தொடர்பு கொண்ட போலீசார், தீபாவளி வருவதால் வழக்கு ஒன்று பதிவு செய்துகொள்வதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு மறுப்பு தெரிவித்ததால், சிலம்பரசன் வீட்டுக்குச் சென்ற போலீசார், அவரின் மனைவியிடம் தவறாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, காவல் நிலையம் முன்பு பெயிண்டர் சிலம்பரசன் தீக்குளித்ததாக கூறப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்