தமிழ்நாடு

அ.தி.மு.க. கூட்டணியை பார்த்து ஸ்டாலின் அரண்டு போய் உள்ளார் - பழனிசாமி

அதிமுக கூட்டணியை பார்த்து திமுக தலைவர் ஸ்டாலின் அரண்டு போய் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் பாமக நிர்வாகிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, பாமக தலைவர் ஜிகே மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டணியை உடைக்க எதிர்கட்சிகள் சதி செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.

பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் பால் கெட்டு விடும். அதனால் கூட்டணி கட்சி தொண்டர்கள் கவனமாக இருந்து முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டு கொண்டார். அதிமுக கூட்டணியை கண்டு திமுக தலைவர் ஸ்டாலின் அரண்டு போய் உள்ளதாகவும், இக்கூட்டணி அடுத்த தேர்தலிலும் தொடரும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி