காலிமனைகளை உரிமையாளர்கள் சரி வர பராமரிக்காவிட்டால் அரசு கைப்பற்றி பூங்கா அமைக்கப்படும் என சேலம் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி முடிவை எடுத்துள்ளது. காலிமனைகளில் குப்பைகள் மற்றும் முட்புதர்கள் நிறைந்து காணப்படுவதாகவும் அதன் மூலம் தொற்று நோய்கள் பரவி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் காலி மனைகளை பராமரிக்காத நில உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கையும் அபராதமும் விதிக்கப்படும் என்று சேலம் மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. பராமரிக்காமல் உள்ள காலியாக உள்ள மனைகளை மாநகராட்சி நிர்வாகமே சுத்தம் செய்து அங்கு விளையாட்டு பூங்கா, சமுதாயக் கூடம் மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகள் அமைத்து பராமரிக்கும் நிலை ஏற்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.