தமிழ்நாடு

பொருளாதார கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - சேலம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

பொருளாதார கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

தந்தி டிவி
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் சார்பில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அந்த வகையில் விரைவில் தொடங்க உள்ள ஏழாவது பொருளாதார கணக்கெடுக்கும் பணிக்கு, மக்கள் உண்மையான விவரங்களை அளிக்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி வேண்டுகோள் விடுத்துள்ளார். கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் சேலத்தில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கணக்கெடுப்பு பணி மூன்று மாதங்களுக்கு நடைபெறும் என்றும், பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் தொழில் அமைப்புகள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்