தமிழ்நாடு

மருத்துவ மாணவியின் படிப்பு பாதிப்பு : கல்வி கடன் பெற்று தந்த மாவட்ட ஆட்சியர்

கல்வி கட்டணம் செலுத்தாததால் மருத்துவப்படிப்பு பாதிக்கப்பட்ட மாணவிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, தாமே நேரில் வங்கிக்கு சென்று 4 லட்ச ரூபாய் கல்விகடன் பெற்று தந்தார்.

தந்தி டிவி
கல்வி கட்டணம் செலுத்தாததால் மருத்துவப்படிப்பு பாதிக்கப்பட்ட மாணவிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, தாமே நேரில் வங்கிக்கு சென்று 4 லட்ச ரூபாய் கல்விகடன் பெற்று தந்தார். கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த சகானாஸ் பேகம் என்ற அந்த மாணவி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார். கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால் அந்த மாணவி கடந்த சில மாதங்களாக கல்லூரிக்கு செல்லாமல் நின்று விட்டார். இந்நிலையில் கல்விக்கடன் பெற்று தந்த மாவட்ட ஆட்சியர், பாதிக்கப்பட்ட அம்மாணவிக்கு அனைத்து உதவிகள் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்