தமிழ்நாடு

6 மாத பெண் குழந்தையின் இதயத்தில் 3 ஓட்டை - உயிருக்கு போராடும் கண்ணீர் வர வைக்கும் காட்சி

தந்தி டிவி

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சித்தூரைச் சேர்ந்தவர் பழனிசாமி. தனியார் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகனும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர்... 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தைக்கு உடல் நல குறைவு ஏற்பட்டபோது மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் குழந்தையின் இதயத்தில் 3 ஓட்டை இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தைக்கு தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ள அரசின் காப்பீடு திட்டம் பொருந்தாது எனவும், 5 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவாகும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததால் செய்வதறியாது திணறிய பெற்றோர்... குழந்தையின் உயிர் காக்க தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்...

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்