சேலம் அம்மாபேட்டை அருகே ஹரி, தவமணி தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த போது, இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில், தவமணி காயமடைந்த நிலையில், மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதாக அரசு ஊழியர் கமலக்கண்ணன் மற்றும் சுதர்சனன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.