தமிழ்நாடு

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதல் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

சேலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

ஆத்தூர் அடுத்த வெள்ளையூர் மணக்காடு பகுதியை சேர்ந்த சந்திரா அவரது மகன் சக்திவேல் மகள் நித்யா ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் தெடாவூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த தனியார் பேருந்து மோதியது. இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் காவல்நிலையத்தில் பேருந்தை நிறுத்தி விட்டு ஓட்டுநர் தப்பியோடியதாக தெரிகிறது. தகவல் அறிந்து வந்த கெங்கவல்லி போலீசார்பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுனரை வலைவீசி தேடி வருகின்றனர்.

BREAKING | உதயநிதியின் பிரசார பேச்சு.. "அவங்க வீட்டு பெண்களிடம் போட்டு காட்ட வேண்டும்"-அமைச்சர் CTR

School | Raid | அன்பில் மகேஷை அடுத்து முத்துக்குமார்.. CCB அதிரடி ரெய்டு

BREAKING || பரபரப்பை கிளப்பிய அண்ணாமலைப் பல்கலை. மாணவி புகார் - பேராசிரியர் ராஜேந்திரன் சஸ்பெண்ட்

CMVijay | தாய் மாமனாக வந்திறங்கும் CM விஜய்.. வெளியான முக்கிய அறிவிப்பு

SP Adithanar | CM Vijay | தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 122வது பிறந்தநாள்..புகழாரம் சூட்டிய CM விஜய்