தமிழ்நாடு

அரசு பேருந்து - கல்லூரி பேருந்து மோதல் : 18 மாணவிகள் உட்பட 37 பேர் காயம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசு பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 37 பேர் காயமடைந்தனர்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து சென்ற அரசுப் பேருந்தை செந்தில்ராஜா என்பவர் இயக்கினார். அப்போது, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அயோத்தியாபட்டினம் நகருக்குள் செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். எதிர்பாராத விதமாக சேலத்திருந்து அவ்வழியாக வந்த தனியார் கல்லூரி பேருந்து, அரசு பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த 14 பேரும், கல்லூரி பேருந்தில் இருந்த 18 பெண்கள் உட்பட 23 பேர் என மொத்தம் 37 பேர் காயமடைந்தனர். அவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்