தமிழ்நாடு

கைதிகள் ஊதியத்தில் 50% பிடித்தம் சட்ட விரோதம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பணம் பிடித்தம் செய்ய வழிவகை செய்யும் தமிழ்நாடு சிறை விதி 481 அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
மதுரை சின்ன சொக்கிக்குளத்தை சேர்ந்த ராஜா, என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, சிறை கைதிகளின் ஊதியத்தில் 50 சதவிகிதம் பணம் பிடித்தம் செய்வது நியாயமானதாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவிகிதம் பணம் பிடித்தம் செய்ய வழி வகை செய்யும் தமிழ்நாடு சிறை விதி 481 அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்கப்படுவதாக நீதிபதிகள் கூறினார். மேலும் உணவு, உடைக்காக நியாயமான முறையில் குறைந்த தொகையை பிடித்தம் செய்ய தமிழக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்தனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை