தமிழ்நாடு

தீவிரமடையும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், 117 பேருக்கு மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி

சம்பள முரண்பாடுகளை களையக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களில் 117 பேர் மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 2009-ஆம் ஆண்டிற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், கடந்த 23-ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, 117 பேருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரும் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று திரும்பி, மீண்டும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு, எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தங்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்