தமிழ்நாடு

ஆன்லைன் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா?- சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

ஆன் லைன் மூலம் வகுப்புக்களை நடத்தும்படி ஆசிரியர்களை வற்புறுத்தும் தனியார் பள்ளிகள், அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தந்தி டிவி

ஆன் லைன் மூலம் வகுப்புக்களை நடத்தும்படி ஆசிரியர்களை வற்புறுத்தும் தனியார் பள்ளிகள், அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை வசூலிக்க தடை விதித்த உத்தரவை எதிர்த்த வழக்கு, நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரிடர் மேலாண்மைக்காக மட்டுமே பேரிடர் மேலாண்மை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அந்த சட்டத்தின் கீழ் கட்டணம் வசூலிக்க தடை விதித்தது தவறு என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, ஆன்லைன் மூலம் வகுப்புக்களை நடத்தும்படி ஆசிரியர்களை வற்புறுத்தும் போது, அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த வழக்குகள் தொடர்பாக, ஜூன் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்