தமிழ்நாடு

4 முறை கிணற்றில் விழுந்த காதலன் 5வது முறை வெளியே வரவில்லை.. கடைசியில் ஊருக்கே டுவிஸ்ட் கொடுத்த காதலி

தந்தி டிவி

காதலி முன் 4 முறை கிணற்றில் விழுந்த

காதலன் 5வது முறை வெளியே வரவில்லை

கடைசியில் ஊருக்கே டுவிஸ்ட் கொடுத்த காதலி

காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்ககோரி, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இளைஞர் ஒருவர் மதுபோதையில் அரங்கேற்றிய சம்பவம் கிராமத்தையே பதற வைத்திருக்கிறது... பார்க்கலாம் விரிவாக..

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள குஞ்சாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய்...

இவரும் அருகேயுள்ள பாலப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும் கடந்த 2 வருடங்களாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்..

இந்நிலையில், காதலியின் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற விஜய், திருமணம் செய்து கொள்ளலாம் வா என குடும்பத்தார் முன்னிலையிலேயே காதலியை அழைத்துச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால் பதறிப்போன பெற்றோர், தங்களது மகளை காதலனிடம் இருந்து பிரித்ததோடு, காதலுக்கு எதிர்ப்பும் தெரிவித்திருக்கின்றனர்...

இதனால், ஆத்திரமடைந்து, காதலியின் குடும்பத்தாரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட விஜய், ஒரு கட்டத்தில் விரக்தியடைந்து அருகில் உள்ள கிணற்றில் குதித்து த*கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது...

4 முறை தொடர்ந்து மிரட்டல் விடுத்து கிணற்றுக்குள் குதித்திருக்கிறார் அந்த இளைஞர்...

ஒவ்வொரு முறையும் மேலே வந்து மிரட்டல் விடுத்து குதித்த விஜய், ஐந்தாவது முறையாக குதித்தபோது, போதை மயக்கத்தில் கிணற்றுக்குள்ளே சிக்கிக் கொண்டார்...

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்திருக்கின்றனர்... சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், கிணற்றுக்குள் இருந்து விஜய்யை போராடி மீட்டனர்...

தொடர்ந்து, அந்த இளைஞரை போலீசார் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்த நிலையில், காதலனுடனே தானும் செல்வதாக, காதலி மன்றாடியது நிலைமையை மேலும் மோசமாக்கியது குறிப்பிடத்தக்கது..

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்