Sairam | Temple | தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் சாய் பாபா ஆலய மஹா கும்பாபிஷேகம்
தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தக்ஷிண ஷீரடி ஸ்ரீ சாய் பாபா ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம், கல்விக் குழுமங்களின் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. நேற்று முன் தினம் விழா தொடங்கிய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வாக கோபுர கலசங்களுக்கும், சாய் பாபா மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பாபாவுக்குச் சிறப்பு அலங்காரமும் தீபாராதனையும் காட்டப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு பாபாவின் அருளை பெற்றனர்.