தமிழ்நாடு

"தேர்தலில் சகாயம் போட்டியிட வேண்டும்" - திரைப்பட இயக்குனர் எஸ். ஏ சந்திரசேகர் பேச்சு

தேர்தலில் சகாயம் போட்டியிட வேண்டும் என்று நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நடத்திவரும், மக்கள் பாதை அமைப்பு சார்பில், சென்னை அருகே முப்பெரும் விழா நடத்தப்பட்டது . இதில் நேர்மையாளர் விருதை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவிற்கு சகாயம் வழங்கினார். விழாவில் பங்கேற்று பேசிய திரைப்பட இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர், லஞ்சம் கொடுப்பதை இளைஞர்கள் நிறுத்த வேண்டும் என்றும் ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை என்றும் குறிப்பிட்டார். பணம் கொடுத்தால் தான் அனைத்து வேலைகளும் நடக்கும் என்று கூறிய சந்திரசேகர், தேர்தலில் சகாயம் போட்டியிட வேண்டும் என்றும், அதிகமான தொகுதிகளில் வென்றால் தான் தமிழகத்தின் நிலையை மாற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.

சகாயம் விழாவில் தந்தி டிவி செய்தி: கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி ஒளிபரப்பு

மக்கள் பாதை அமைப்பு நடத்திய விழாவில், தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என, பத்திரிகையாளர் குருமூர்த்தி , தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் தெரிவித்த காட்சி திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்