தமிழ்நாடு

அம்மா இருசக்கர வாகன திட்டம் - விதிகளில் திருத்தம்

அம்மா இருசக்கர வாகன திட்ட விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

அம்மா இருசக்கர வாகன திட்ட விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பணிபுரியும் பெண்களுக்காக அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டடது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் அம்மா இருசக்கர வாகன திட்ட விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இந்த திட்டத்தின் பயனாளிகள் வயது வரம்பு 40 லிருந்து 45 ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பயனாளி 8-ம் வகுப்பு தேர்வை எழுதியிருக்க வேண்டும் என்ற பிரிவு ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் துறைகள் உள்ளிட்டவற்றில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பெண்களும் இத் திட்ட பயனாளிகளாக முடியும் என்ற பிரிவு சேர்க்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்