கறுப்பர் கூட்டத்துக்கு திமுக ஆதரவு என, திமுக தலைவர் ஸ்டாலின் பெயரில் ட்விட்டரில் போலி கணக்கு தொடங்கி, அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி புகார் மனு அளித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் நெருங்கும் நேரத்தில் திட்டமிட்டு திமுக மீது அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டினார்.