ஆர்.எஸ்.பாரதி கைது தகவலை அறிந்து, சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு திமுக நிர்வாகிகள், வந்தனர்.
எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன், திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் உள்ளிட்டோரை உள்ளே அனுமதிக்க போலீசார் மறுத்தனர். இதனால் இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, ஆர்.எஸ். பாரதியை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி செல்வகுமார், ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.