தமிழ்நாடு

சாலையில் நின்ற காரில் ரூ. 30 கோடி பறிமுதல் - வருமான வரித்துறை அதிரடி வேட்டை

சேத்துப்பட்டில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சோதனை போட்ட போது, 30 கோடி ரூபாய் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தந்தி டிவி

"சாலையில் நின்ற காரில் ரூ. 30 கோடி பறிமுதல்"

வருமான வரித்துறையின் அதிரடி சோதனை தொடர்ந்து, சென்னை மாநகரில், கார்களில் பணம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. போயஸ்கார்டன் பகுதியில், தீபக் என்பவர் வீட்டில் 28 கோடி ரூபாயும், பெசன்ட் நகரில் ஒரு இடத்தில் 24 கோடி ரூபாயும் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. சேத்துப்பட்டில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சோதனை போட்ட போது, 30 கோடி ரூபாய் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வருமான வரித்துறையின் இந்த அதிரடி சோதனையில், மொத்தம் 120 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முட்டை கொள்முதல் தொடர்பான நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து, தற்போதைய இந்த சோதனை, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்