தமிழ்நாடு

விருதுநகர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது...

செயல்படாத அரிசி ஆலையில் அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசு தயாரித்த சிவகாசியை சேர்ந்த பக்ரிநாத் என்பவர் கைது.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே அன்னபூர்ணியாபுரத்தில் செயல்படாத அரிசி ஆலையில் அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசு தயாரித்ததாக சிவகாசியை சேர்ந்த பக்ரிநாத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள வீடு மற்றும் குடோன்களில் அனுமதியின்றி சிறிய ரக பட்டாசு மற்றும் பேன்சி ரக பட்டாசுகள் வீடுகளில் மற்றும் தயாரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதனையடுத்து வெம்பக்கோட்டை போலீசார் மற்றும் சாத்தூர் டி.எஸ்.பி மதியழகன் ஆகியோர் நடத்திய சோதனையில் அரிசி ஆலையில் அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து பட்டாசு தயாரித்த பக்ரிநாத்தை கைது செய்த போலீசார், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேன்சி ரக பட்டாசுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்