தமிழ்நாடு

ஆர்.எஸ். பாரதி மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீதான வன்கொடுமை தடை சட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தந்தி டிவி

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பட்டியலின மக்களை அவமதித்ததாக கூறி அளிக்கப்பட்ட புகாரின் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு குறித்து சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி சதிஷ்குமார் முன்பு நடைபெற்ற போது, அரசியல் காரணங்களுக்காக உள்நோக்கத்துடன் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் பட்டியலின மக்களை புண்படுத்தும் விதமாக பேசவில்லை என்றும் ஆர்.எஸ். பாரதி தரப்பில் வாதிடப்பட்டது. புகார் தாரர் தரப்பில் வாதிடுகையில், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு மக்களை பிளவுபடுத்தும் வகையிலும், நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் இருந்ததாக கூறப்பட்டது. இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதிஷ்குமார், ஆர்.எஸ்.பாரதி மீதான வன்கொடுமை தடை சட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டார்.மேலும், வழக்கை ரத்து செய்ய கோரிய ஆர்.எஸ்.பாரதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.வழக்கு விசாரணையை தினமும் நடத்தி தாமதமின்றி முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

மேலும் அறிவுப்பூர்வமான விவாதங்களை நடத்தாமல், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்கள், எதிர்தரப்பினர் மீது விஷத்தை கக்குவது வழக்கமாகி விட்டதாகவும் கருத்து தெரிவித்தார்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு