தமிழ்நாடு

தலைமறைவாக இருந்த ரவுடி பினு மீண்டும் கைது

ஜாமினில் வெளிவந்து, தலைமறைவாக இருந்த ரவுடி பினுவை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சென்னையில் ரவுடிகள் சூழ பிறந்தநாள் கொண்டாடிய பினு என்ற ரவுடி அப்போது கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளிவந்த அவர், மாங்காடு காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், பினு மாயாமானார். இந்தநிலையில், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள பாதிரிவேடு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த ஒரு கும்பலை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையின் போது, அந்த கும்பலில் ரவுடி பினு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கும்பலைச் சேர்ந்த மற்றவர்கள் தப்பியோடிய நிலையில், பினு மற்றும் அவனது கூட்டாளி பிரகாஷ் ஆகியோரை மட்டும் போலீசார் கைது செய்தனர். கடந்த 2 மாதங்களாக ஆந்திர எல்லையில் உள்ள சத்தியவேடு என்ற பகுதியில் பினு பதுங்கியிருந்தது போலீசார் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்