தமிழ்நாடு

வீடு புகுந்து பிரபல ரவுடி வெட்டிக் கொலை...

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த பிரபல ரவுடி பாண்டியன், மர்ம நபர்களால் வீடு புகுந்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
சென்னை திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த பிரபல ரவுடி பாண்டியன், மர்ம நபர்களால் வீடு புகுந்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, கையில் பயங்கர ஆயுதங்களுடன் பாண்டியன் வீட்டு கதவை பலமாக தட்டியுள்ளது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த பாண்டியன் கதவை திறக்காமல் தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது கதவை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்த அந்த மர்ம கும்பல், பாண்டியனை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடியது. குடும்பத்தினர் கண்முன்னே பாண்டியன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பாண்டியன் கொலை வழக்கு ஒன்றில் முக்கிய குற்றவாளியாகவும், பல கொலை மிரட்டல் வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்