தமிழ்நாடு

24 வருஷ வேட்டை... ஒருவழியாக சிக்கிய சென்னையின் பிரபல ரவுடி.. ஹிஸ்டரி என்ன?

தந்தி டிவி

24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி ராஜேந்திரன் என்ற சேராவை தனிப்படை போலீசார் ஆந்திராவில் கைது செய்தனர். வியாசர்பாடி பி.வி காலனியைச் சேர்ந்த சேரா மீது 2 கொலை வழக்குகள் உள்பட 15 வழக்குகள் உள்ளன. 2001-ம் ஆண்டு முதல் ரவுடி சேரா தலைமறைவான நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்து, சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்தினர். ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்த சேரா, கஞ்சா விற்பனை மற்றும் மிரட்டி பணம் பறிப்பது போன்ற வேலைகளை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. சேரா மீது எம்.கே.பி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

CM Vijay | VCK | "முதல்வர் விஜய்க்கு தெரிந்தே தான் அரேங்கேறியதா?" - வன்னியரசு கேள்வி

CM Vijay | PM Modi | TVK | முதல்வர் விஜய்க்கு அடித்த போன் கால் - மறுபுறம் PM மோடி

ADMK | முக்கிய இடத்தில் அதிமுக MLA-கள்.. அதிரும் அரசியல் களம்

Udhayanidhi Stalin | DMK | உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு

CM Vijay | VCK | Thirumavalavan | டெல்லியில் திருமா - கடும் கண்டனம்