Dindigul | Market | வெங்காய மார்க்கெட்டில் அழுகிய வெங்காயம் – கடைகளுக்கு பூட்டு #Dindigul #Onion #Market #FoodSafety திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டில், அழுகிய வெங்காயத்திலிருந்து புழுக்கள் வெளியேறி துர்நாற்றம் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த, கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்ய 450 டன் வெங்காயத்தை தமிழக அரசு கொள்முதல் செய்ய முயன்றது. ஆனால் தரமற்ற வெங்காயம் எனக் கூறி அரசு மறுத்த நிலையில், விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட வெங்காயத்தை வியாபாரிகள் வாங்க மறுத்துள்ளனர். இதையடுத்து, திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த வெங்காயம் அழுகி, புழுக்கள் வெளியேறி கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் அளித்த புகாரின்பேரில் ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், வெங்காயம் வைக்கப்பட்ட கிடங்கு மட்டுமின்றி அருகிலுள்ள கடைகளுக்கும் பூட்டு போட்டுச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள், அழுகிய வெங்காயத்தை உடனடியாக அகற்றவும், பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.