தமிழ்நாடு

பூட்டை உடைத்து வீடுகளில் கைவரிசை காட்டிய 2 கொள்ளையர்கள் கைது : 125 சவரன் நகை பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களாக பூட்டியிருந்த வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தந்தி டிவி

வாலாஜாபாத்தில் இருந்து தென்னேரி செல்லும் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது போலீசாரை பார்த்த 2 பேர் வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்ததில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், பாலுசெட்டி சத்திரம், ஓரகடம் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளை குறி வைத்து கொள்ளையடித்து வந்ததை ஒப்புக் கொண்டனர். இதனைத் தொடர்ந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த 125 சவரன் நகையை பறிமுதல் செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறை​யில் அடைத்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை