தமிழ்நாடு

காரை மறித்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : தாய் - மகன் கைது

கோவையில் நகைக்கடைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட நகைகள் கொள்ளை போன விவகாரத்தில் திருப்பதியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
கடந்த 7ஆம் தேதி தமிழகம் - கேரள எல்லையில் காரில் கொண்டு செல்லப்பட்ட நகைக்கடைக்கு சொந்தமான 98 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்நிலையில், திருப்பதி ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த இருவரிடம் 60 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சமா, அகமது சலீம் என்பதும், கோவை கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. நகைகளை வீட்டில் வைக்க பயந்து திருப்பதிக்கு சென்ற நிலையில் போலீசிடம் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்