தமிழ்நாடு

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் நூதன திருட்டு

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டி முகத்தில் மயக்க மருந்தை தெளித்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தந்தி டிவி
தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டி முகத்தில் மயக்க மருந்தை தெளித்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டையை சேர்ந்த சுகுணாம்மாள் என்ற மூதாட்டி, பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர் ஒருவர், தோஷம் கழிப்பதாக கூறி, மறைத்து வைத்திருந்த தண்ணீரை மூதாட்டியின் முகத்தில் தெளித்துள்ளார். இதில் சுகுணாம்பாள் மயக்கம் அடையவே அணிந்திருந்த செயின், கம்மல் உள்ளிட்ட 10 பவுன் தங்க நகைகளோடு அந்த மர்ம நபர் மாயமாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்