தமிழ்நாடு

வீடு வாடகைக்கு பார்ப்பது போல சென்று கொள்ளை முயற்சி - ஒருவர் கைது

சென்னை போரூர் அருகே வாடகைக்கு வீடு பார்ப்பது போல் நடித்து பெண்ணை கத்தியால் குத்தி நகையை பறித்த கொள்ளையனை பொது மக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தந்தி டிவி

சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரம் முத்துமாரி அம்மன் நகரை சேர்ந்தவர் நிர்மலா. அவரது வீட்டின் மேல்மாடியில் உள்ள ஒரு பகுதியை வாடகைக்கு கேட்டு கணவன் - மனைவி போல் இருவர் வந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த அவர்கள் இறங்கி வீட்டினுள் செல்லும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது.

வீட்டை சுற்றிப்பார்த்த ஆணும், பெண்ணும் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். அவர்களுக்கு தண்ணீர் கொண்டு வர சமையலறைக்குள் சென்ற நிர்மலாவை கத்தியுடன் பின்தொடர்ந்த ஆண், அப்பெண்ணை கீழே தள்ளி தாக்கி சங்கிலியை பறித்துள்ளான். காதில் இருந்த கம்மலை அறுக்க முயன்ற போது கத்தியை பிடுங்கி நிர்மலா சப்தம் எழுப்பி போராடியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. நிர்மலாவின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த இளைஞர் ஓடி சென்று அவரை காப்பாற்றி, கொள்ளையனை மடக்கி பிடித்தார். பின்னர் கொள்ளையனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையனுடன் வந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி ஒன்றும் தெரியாது போல் நடந்து சென்று தப்பித்த காட்சியும் கண்காணிப்பு கேமராவில் பதிவானது

தப்பி சென்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் காயமடைந்த நிர்மலா மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க, இப்பகுதியில் போலீசார் அடிக்கடி ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு