ஆர்.கே. நகர் தொகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் தொற்று நோய் பரவுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று கூட நிறைவேற்றவில்லை என்றும் தொகுதி பக்கமே இதுவரை வரவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.