தமிழ்நாடு

தமிழக- கேரள நதிநீர் பங்கீடு ஆலோசனை - இரு மாநில அதிகாரிகள் முதற்கட்ட பேச்சுவார்த்தை

தமிழகம், கேரளா இடையிலான நதிநீர் பங்கீடு குறித்து இருமாநில அதிகாரிகளுக்கு இடையேயான முதல்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

தமிழகம் மற்றும் கேரளா இடையே நதிநீர் சிக்கல்களை களைய இருமாநில முதலமைச்சர்களும் கடந்த செப்டம்பர் மாதம் திருவனந்தபுரத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் இரு மாநில முதன்மை செயலாளர்களும் 6 மாதங்களுக்கு ஒரு முறை கூடி நதிநீர் பிரச்சினை தொடர்பாக ஆலோசனை செய்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், இரு மாநில அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், பரம்பிக்குளம்-ஆழியாறு, பாண்டியாறு - புன்னம்புழா, நீராறு - நல்லாறு திட்டம், நெய்யாறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் நீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்