தமிழ்நாடு

``பெண்களை மட்டுமல்ல ஆண்களையும்..'' ரேவண்ணா குடும்பம் மீது சொந்த கட்சி தொண்டரே அதிர்ச்சி புகார் -

தந்தி டிவி

ரேவண்ணா குடும்பத்தை சேர்ந்த மேலும் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் ஆபாச வீடியோ விவகாரத்தில், ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் ரேவண்ணாவின் மற்றொரு மகனான சூரஜ் ரேவண்ணா மீது, ஜேடிஎஸ் தொண்டரான சேத்தன் என்பவர் பாலியல் புகார் அளித்துள்ளார். சூரஜ் ரேவண்ணா தன்னை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாகவும், இதுபற்றி வெளியே சொல்லாமல் இருந்தால் 5 கோடி ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறியதாகவும் சேத்தன் தெரிவித்துள்ளார். ஆனால் சேத்தன் மீது சூரஜ் ரேவண்ணாவின் நண்பரான சிவகுமார் போலீசில் புகார் அளித்துள்ளார். பணம் பறிப்பதற்காக சூரஜ் மீது பொய்யான பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்வதாக சேத்தன் மிரட்டியதாகவும், முதலில் 5 கோடி கேட்ட சேத்தன் பின்பு 2 கோடி ரூபாய் கேட்டதாகவும் சிவகுமார் புகாரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சேத்தன் மற்றும் அவரது உறவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்