தமிழ்நாடு

ஓய்வு பெற்ற ஆசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு : பெண் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள்தண்டனை விதிப்பு

கள்ளக்குறிச்சியில் சொத்து தகராறில் ஓய்வுபெற்ற ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தந்தி டிவி
கள்ளக்குறிச்சியில் சொத்து தகராறில் ஓய்வுபெற்ற ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜோசப் ரத்தினகுமார் சொத்து தகராறு காரணமாக, கொலை செய்யப்பட் வழக்கு கள்ளக்குறிச்சி கூடுதல் 3-வது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி செல்லமுத்துக்குமாரி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், அறிவழகன், செந்தில் , நித்திய ராஜ் இளையராஜா, சரஸ்வதி, ஆனந்த் ஆகிய ஆறு பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சர​ஸ்வதிக்கு, நான்காயிரம் ரூபாயும், மற்ற 5 பேருக்கு தலா ஆறாயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்