தமிழ்நாடு

தடுப்பணை உடைந்த விவகாரம் : தலைமை பொறியாளரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

தடுப்பணை உடைந்த விவகாரத்தில் தலைமை பொறியாளரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தடுப்பணை உடைந்த விவகாரம் : தலைமை பொறியாளரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

தடுப்பணை உடைந்த விவகாரத்தில் தலைமை பொறியாளரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை உடைந்தது. இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி, பொதுப்பணித்துறையின் நீர்வள தலைமை பொறியாளர் உட்பட, 4 பேரை சஸ்பெண்ட் செய்து, கடந்த ஜனவரி மாதம், தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தலைமை பொறியாளர் அசோகனின் சஸ்பெண்ட் உத்தரவை மட்டும் ரத்து செய்து, தமிழக அரசு மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது, அசோகன் நீர்வளத்துறையின் சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நீர்வளத்துறையின் சிறப்பு செயலாளராக பணியாற்றி வந்த ரவீந்திரபாபு, நீர்வளத்துறையின் தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்