தமிழ்நாடு

நள்ளிரவில் மின்தடை - சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்...

2 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் வராதால், நெல்சன் மாணிக்கம் சாலையில் நள்ளிரவில் பொதுமக்கள் திரண்டு சாலையில் அமர்ந்தனர்.

தந்தி டிவி

சென்னையில் பகல் நேரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில், இரவு நேரத்தில் அதிக அளவில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. பல மணி நேரம் மின்தடை நீடிப்பதால், மக்கள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை சூளைமேடு பகுதியில் திருவேங்கடபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் நேற்று இரவு தொடர்ந்து மின்தடை நீடித்தது. 2 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் வராதால், நெல்சன் மாணிக்கம் சாலையில் நள்ளிரவில் பொதுமக்கள் திரண்டு சாலையில் அமர்ந்தனர். அப்போது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பேச்சு வார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.

மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

இதேபோல் சென்னை மடிப்பாக்கம் பகுதியிலும் இரவில் மின்வெட்டு ஏற்பட்டது. இதையடுத்து, அங்குள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். தால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே, கடும் வெயில் மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வரும் நிலையில், மின்தடையும் நீடிப்பதால் கடும் அவதிக்குள்ளாவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்